தங்களின் வரவை 'ஹைகூ' வின் கீழ் இருக்கும் "COMMENTS" பகுதியில் தங்களின் கருத்துக்கள் மூலம் பதிவு செய்ய வேண்டுகிறேன்

Sunday, October 19, 2008

தன்னை உணர்


தரம் அறியாமல்,உண்மை
நிலை அறியாமல் பிச்சை
எடுக்கிறது:யானை

கடமை


ஒருநாளில் இருமுறை சரியாய்
நேரம் காட்டிடும் கடிகாரம்
நின்ற பிறகும்

நடைமுறையில் பிழை


பெருமை படுத்தும் தபால்தலை
மறுநாளே கரைபடுத்தும்
தபால் நிலையம்

Monday, October 13, 2008

யாருக்கு கல்யாணம்?


காத்திருக்கிறார்கள் முதிர்கன்னிகள்
மழை வேண்டிக் கல்யாணம்;
கழுதைக்கு

கலி யுகம்


புதுமனைப் புகுவிழா
முதியோர் இல்லத்தில் பெற்றோர்
அழியும் நாகரிகம்

உள்ளே ஊனம்


ஊன்று கோல் பயணம்
இடம் மறுக்கும் இளைஞன்
அது 'ஊன்முற்றோர் இறுக்கை"

வாழ்க்கை


கலங்கி தெளிந்தால்
தான் இனிக்கும்:
வாழ்க்கை

நம் தேசம்


நீர் மறுக்கும்,உரிமை பறிக்கும்
சுற்றங்கள்.அழியும் அடையாளமாய்
நம் தேசம்

நின்றாவது கேட்க்குமா?


கோவிலுக்குள் கொள்ளை கண்முன்னால்
தட்டிக் கேட்க்காமல் அமைதியாய்
கடவுள்

ஏழையின் சமயலறை


"பொருளாதாரம் உயர்வு"அரசு அறிவிப்பு
எப்போதும்போலவே ஏழையின் சமயலறை
"அடுப்பில் தூங்குது பூனை"

காலத்தின் கோலம்


கலக்கத் தண்ணீர் இல்லை
கலங்கி இருக்கும்
பால்க்காரன்

உயிர் பயம்


காட்டுக்குள் மனிதன்
கலங்கி நின்றன;
மரங்கள்

தொப்புள் கொடி


காடுகளை அழித்தனர்
சாலைகளால் இணைத்தனர்
அறுந்தது;தொப்புள் கொடி

கண்ணாடி


காலை எழுந்தவுடன் உலகம்
தன் முகம் பார்க்கும் கண்ணாடி
புல் நுனி பனித்துளி

சந்தர்ப்பம்


வாய்ப்பு கிடைத்தால்
சூரியனையே மறைத்திடும்
தெருப்புழுதி

உன் சாவி யாரிடம்?


அப்பாவுக்கு கொள்ளிவைக்க
அனுமதி கேட்டுக் காத்திருக்கிறேன்
கிடைக்க்கவில்லை : விசா

கடமை


நிழல்
தருகிறது மரம்
வெட்டுகிறவனுக்கும்

பச்சோந்தியின் தேசப்பற்று


இந்தியா முன்னேற வேண்டுகிறேன்
கூடுதல் பணிக்கு இடையிலும்:
அமெரிக்காவிலிருந்து

ஆக்கிரமிப்பு


குளம் முழுவதும் வீடுகள்
அல்லியைத் தேடி அலைகிறது;
நிலா

மாற்றி காத்திருத்தல்


சாயக்கழிவு.தற்கொலைக்குத்
தயாராகி கொக்குக்காக காத்திருக்கின்றன:
மீன்கள்

செறுப்பு


இந்தக் கோடையிலாவது பையனின்
ஆசையை நிறைவேற்ற அய்யாவுக்கும்
ஆசை:செறுப்பு

தாய்மை


பாய் வற்றி அடிமாடாகி வாசல்
தாண்டுகையில் மனதினில் சலனம்;
வீட்டிற்குள்ளிருந்து கேட்க்கும்
குழந்தையின் அழுகுரல்

கிரிக்கெட்டில் வெற்றி நிச்சயம்


அரை இறுதியில் ஜெயித்தவுடன்
இறுதி வெற்றியையும் சேர்த்து
கொண்டாடும் நாடுகள்:
பைனலில் இந்தியா

துணை


ஆற்று வெள்ளத்தில் அலைகளியும்
அரச இலைக்கு ஒரே ஆறுதல்
அதன் மேலுள்ள சிற்றெறும்பு

போதி மரம்


குடத்துடன் பெண்கள் வரிசையில்
படும் வேதனை ஆண்களுக்கும்
உணர்த்தியது:பெட்ரோல் பங்க்

கலவரமாய் நிலவரம்


குழந்தைக்கு தடுப்பூசி போதும்
ஒருமுறை.தேவையே இருக்காது
மறுமுறை

சுய நலம்


குஞ்சு பொறிக்காத முட்டை
முட்டை இடாத கோழி
சுழற்சியை மாற்றிய
சுயநல மனிதன்

வாக்குறுதிக்கு மட்டும்


"குழந்தை தொழில் ஒழிப்பு"
கூட்டத்தின் நுழைவாயிலில்
செருப்பு துடைக்கும் சிறுவன்

காவ(லி)ல் நிலையம்


வாசலில் துப்பாக்கிக் காவல்
எந்தநேரமும் முழுப் பாதுகாப்பில்
காவல் நிலையம்

ஒதுக்கீடு


அமைச்சர் மகனுக்கு
அரசு கல்லூரியில் இடம்
இட ஒதுக்கீட்டில்

முடிவு உன்னிடம்


கடவுளுக்கு கடைசிகால பூசை
பெருசுக்கு கடைசிநேர அஞ்சலி
பூக்கடையில் ஒரேஒரு மாலை

கொடுத்துவைத்த அலமாரி


மடிப்புகலையாமல் சட்டை அலமாரிக்குள்
அப்பா எப்போதும் ஓட்டைப்
பனியனுக்குள்

பயணம் ?


வேலியாய் இருந்தும் வெட்டப்பட்ட
சாலையோர மரங்கள்:இனி
பயணம் பாதுகாப்பற்றது

முற்போக்கு சிந்தனை


விதவை பார்க்கும்போதெல்லாம்
சுமங்கலியாக்குகிறது:கண்ணாடியில்
உள்ள பொட்டு

அவசரம்


பின்னால் இருந்து சாமி கும்பிட்டு
முன்னால் இடம்பிடிக்க அவசரமாய்
ஓட்டம்:கரகாட்டம் ஆரம்பம்

ஆணை


போக்குவரத்து சரிசெய்யும் காவலர்
கையில் நிற்கச்சொல்லும் பலகை
தலைகீழாய்

மறைந்த உண்மை


சிலையின் அழகில் மறைந்து
போனது உளியும் வாங்கிய
அடி

Sunday, October 12, 2008

அனுமதி


அனுமதியின்றி முத்தமிட்டு
அடி வாங்கி சாகிறது:
கொசு

உளியின் ஓசை


உச்சந்தலையில் வாங்கிய அடி
உள்ளங்காலில் வெளியேறியது:
கல் சிலையானது

சுடும் போட்டி


துப்பாக்கி சுடும் போட்டி
தடை பட்டது:துப்பாக்கியே
சுடப்பட்டதால்

சொர்க்கலோகப் பாதையில்


உடல் விடுத்த மேலுலகப்பயணம்
சகுனம் சரியில்லை;குறுக்கே பாயும்
செயற்கைக்கோள்

ஆக்கிரமிப்பு


வான் வெளியிலும் மனிதக்
கழிவுகள்:செயல் இழந்த
செயற்கை கோள்கள்

வருடம் முழுவதும்


வராத நதியில் வருடம்
முழுவதும் தண்ணீர்:
கானல்

உனக்காக


உனக்காக மழைவேண்டி
வான் நோக்கிக் கைவிரித்து
பிச்சை கேட்க்கும் மரம்

எளியோர் உழைப்பு


இருவரின் உழைப்பு
கலைக்க எல்லோரும் ஆர்வமாய்:
குருவிக் கூடு

பூகம்பம்


பசி எடுக்கும் போதெல்லாம்
தன் வயிரையே உண்ணும்:
பூமி

தாய்மை


பறந்தே அறியாதது
பருந்திடம் குஞ்சு காக்க
பறக்கிறது:கோழி

இடம் மாறிய வெள்ளம்


வரண்ட ஆற்றின் நடுவே விவசாயி
பெறுக்கெடுக்கும் வெள்ளம்:
கண்களில்

ஆடிப் பெருக்கு


ஆற்றுப் படுகை.குழிவெட்டி
குளிக்கும் மக்கள்.இன்று
ஆடிப் பெருக்கு

Friday, October 3, 2008

அம்மா


அழுத குழந்தை பார்த்ததும்
சிரித்தது:முகம் பொத்தி
அழும் அம்மா

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

Free Blog Counter