தங்களின் வரவை 'ஹைகூ' வின் கீழ் இருக்கும் "COMMENTS" பகுதியில் தங்களின் கருத்துக்கள் மூலம் பதிவு செய்ய வேண்டுகிறேன்

Thursday, July 30, 2009

இறந்தகாலத்தில் நிகழ்காலம்


புதைபொருள் ஆராய்ச்சி
முதுமக்கள் தாழி : உள்ளே
சிதைந்த சிம்கார்டு

Wednesday, July 22, 2009

கூடா நட்புபத்தில் ஒன்றுக்கே விசம்
அடிபட்டுச் சாகின்றன
மற்ற ஒன்பதும்

Saturday, July 11, 2009

மின் தடையால் :


நகரஇரவில் மின்தடையில்
தெளிவாகத் தெரிகின்றன :
நட்சத்திரங்கள்

Wednesday, May 13, 2009

சரியாகாத வியாதி


இரவில் நடக்கும் வியாதி
இன்னும் சரியாகவில்லை
நிலாவுக்கு

Thursday, February 19, 2009

திட்டமிடு


நிதானமாய்த் திட்டமிட்டால்
நடக்காமல் தடுக்கலாம்
கடைசி நேர ஓட்டத்தை

களங்கம் இருந்தாலும்...


களங்கம் குறை இருந்தாலும்
அழகுக்கு எடுத்துக்காட்டாய்
என்றென்றும் : நிலா

மேகம்


என் தூண்டிலில் சிக்கவே இல்லை
குளத்துக்குள் நகர்ந்துகொண்டு
இருக்கும் : மேகம்

Saturday, February 14, 2009

நியாயவிலைக் கடை


ஏழை துயர் துடைக்கும் அரசாங்கக்கடை
இருப்பில் இருக்கும் எப்போதும்
இருப்பு இல்லை என்ற பதில்

பதட்டம்


திடீர் மழையில்
ஒதுங்க இடம்தேடி ஓடுபவர்
கையில் விரிக்காத குடை

ரத்தம் உறியும் அட்டை


உயிர் இருக்கும் வரை உறியும்
உயிரே இல்லாத
கடன் அட்டை

வாடிய பூ


விற்காத பூக்கள் வாடாமல் கூடையில்
வாடிப்போன அரும்பாக
பூ விற்கும் சிறுமி

பட்ட மரம்


பட்ட மரத்தின் இலையில்லா கிளைகளில்
பச்சை பச்சையாய் அசையும் :
கிளிகள்

உயிரா?உயிலா?


உயிர் துறந்தவரை அனுப்பிவிட்டு
உயில் திறக்கும் ஆர்வத்தில்
அவசரமாய் வாரிசுகள்

சூத்திரம்


சாதி ஒழிப்புப் போராட்டம்
முடிந்த அடுத்தக் கட்டம்
இட ஒதுக்கீடு ஆர்ப்பாட்டம்

நிழல்!


நாலு தலைமுறை இளைப்பாறிய மரம்
வெட்டிய இடத்தில் நாலு பேர்
தங்கிச் செல்லும் நிழற்குடை

மறக்காமல்..


குடை மறந்த நாளில்
மறக்காமல் வந்தது :
மழை

Sunday, January 11, 2009

ஆண்களுக்கும் பிரசவ வேதனை..!


பெண்களின் பிரசவ வேதனை
ஆண்களுக்கும் உணர்த்தியது:
பெட்ரோல் பங்க்

Monday, January 5, 2009

கணினி


எலியின் வால் பிடித்து
சன்னலுக்குள் எட்டிப்பார்த்தால்
விரிகிறது உலகம்

குழப்பினால் நல்லது


தெளிந்த குளத்தை
கலக்கினால் நல்லது தான் :
மீன் பிடிக்க

வளர்ச்சியால் வீழ்ச்சி


வளர்ந்தது விஞ்ஞானம்
சுருங்கியது நேரமும் தூரமும்
கூடவே உறவும் உணர்வும்

பேராசை


அறுசுவையில் சோறு
ஆங்கிலத்தில் பேரு :பிறக்க
ஏங்குகிறாள் மாடிவீட்டில் நாயாக

தேவையில்லை கருத்தடை


அறுவடை நெல்லை மறுபடி
விதைத்தால் முளைக்காதாம் :
இதற்குமா கருத்தடை

வாழ்வாதாரம்


எப்படியும் கிடைக்கும் சாப்பாடு
வயல் விற்றான் நம்பிக்கையோடு:
பயல் படிப்புக்காக

தேவையில்லா சாதனை


ஒரு தலைமுறையோடு நிறுத்திக்
கொள்ளும் நெல்லும் கோழியும் :
மரபணு சாதனையால் வந்த சோதனை

அரசியலில்....


மரம் நடும் விழா
குழப்பத்தில் குடிமகன்
நடப்படுகிறது செடி

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

Free Blog Counter