தங்களின் வரவை 'ஹைகூ' வின் கீழ் இருக்கும் "COMMENTS" பகுதியில் தங்களின் கருத்துக்கள் மூலம் பதிவு செய்ய வேண்டுகிறேன்

Thursday, February 19, 2009

திட்டமிடு


நிதானமாய்த் திட்டமிட்டால்
நடக்காமல் தடுக்கலாம்
கடைசி நேர ஓட்டத்தை

களங்கம் இருந்தாலும்...


களங்கம் குறை இருந்தாலும்
அழகுக்கு எடுத்துக்காட்டாய்
என்றென்றும் : நிலா

மேகம்


என் தூண்டிலில் சிக்கவே இல்லை
குளத்துக்குள் நகர்ந்துகொண்டு
இருக்கும் : மேகம்

Saturday, February 14, 2009

நியாயவிலைக் கடை


ஏழை துயர் துடைக்கும் அரசாங்கக்கடை
இருப்பில் இருக்கும் எப்போதும்
இருப்பு இல்லை என்ற பதில்

பதட்டம்


திடீர் மழையில்
ஒதுங்க இடம்தேடி ஓடுபவர்
கையில் விரிக்காத குடை

ரத்தம் உறியும் அட்டை


உயிர் இருக்கும் வரை உறியும்
உயிரே இல்லாத
கடன் அட்டை

வாடிய பூ


விற்காத பூக்கள் வாடாமல் கூடையில்
வாடிப்போன அரும்பாக
பூ விற்கும் சிறுமி

பட்ட மரம்


பட்ட மரத்தின் இலையில்லா கிளைகளில்
பச்சை பச்சையாய் அசையும் :
கிளிகள்

உயிரா?உயிலா?


உயிர் துறந்தவரை அனுப்பிவிட்டு
உயில் திறக்கும் ஆர்வத்தில்
அவசரமாய் வாரிசுகள்

சூத்திரம்


சாதி ஒழிப்புப் போராட்டம்
முடிந்த அடுத்தக் கட்டம்
இட ஒதுக்கீடு ஆர்ப்பாட்டம்

நிழல்!


நாலு தலைமுறை இளைப்பாறிய மரம்
வெட்டிய இடத்தில் நாலு பேர்
தங்கிச் செல்லும் நிழற்குடை

மறக்காமல்..


குடை மறந்த நாளில்
மறக்காமல் வந்தது :
மழை

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

Free Blog Counter